Five Elements -other elements இதர பஞ்ச பூதங்கள் - உடல் ஆரோக்கியத்துக்கு பயன்படுத்துவது எப்படி ?
நம் வாழ்க்கையில் பயனுள்ளதும் தெரிந்து கொள்ளவேண்டியதும் உடல் மனம் ஆரோக்கியத்துக்கு வழிகோலுவதுமான நிறைய விஷயங்கள் இந்த தொடர்களில் விளக்கப்படுகின்றன. இதனை படிப்பதற்காக சிறிது நேரம் ஒதுக்கி முழுவதுமாக இறுதி வரை படித்து பயன் அடையுங்கள். ஆங்கிலத்தில் இருந்தால் மிகவும் அடியில் Tamil என்பதில் கிளிக் செய்தால் தமிழில் படிக்கலாம்.
இந்த தொடரை பின் தொடருங்கள். அதற்காக இந்தப்பக்கத்தின் வலப்புறம் மேல்பகுதியில் காணப்படும் "பின்தொடர் " என்பதில் கிளிக் செய்யவும். இந்த தொடரில் வரும் அனைத்து கட்டுரைகளையும் அப்பொழுது தான் உங்களுக்கு விடாமல் படிக்க முடியும்.
ஆகாயத்தைப் பற்றி விளக்கமாக முன்னர் ஒரு கட்டுரையில் பார்த்தோம். தொடர்ந்து பிற பூதங்களைப்பற்றியும் நாம் இப்போது பார்க்கலாம்.
ஆகாயம் இது தான் அடிப்படையான பூதம். பூதம் என்பது இங்கு (இயங்கும்) பொருள் என்ற அர்த்தத்தில் தான் கையாளப்படுகிறது. பேய் பிசாசு என்ற அர்த்தத்தில் அல்ல என்பதை கவனிக்கவும். இது இல்லை என்று இருக்கும் ஒன்று. மற்ற நான்கு பூதங்களும் உருவாக இதுவே காரணமாக அமைகிறது ஆகாயம் என்பது சிவம்(ன்) என்றும் நாம் முன்னர் விளக்கினோம்.
ஆகாயம் என்பது சீவன். அதாவது உயிர் . இந்த உயிர் ஆனது சக்தி என்ற உடலுடன் இணைகிறபொழுது தான் பிற பூதங்கள் உண்டாகின்றன.
ஆகாயம் பிரபஞ்சம் முழுவதும் நிறைந்து இருக்கிறது. ஆகாயம் என்பதே பிரபஞ்சம். ஆகாயம் முழுவதும் சக்தியால் நிறைந்து இருக்கிறது சக்தி என்பது இருவகைப்படும் . ஒன்று நேர்மறை. மற்றது எதிர்மறை (Positive charge and negative charge), எலக்ட்ரோன் மற்றும் புரோட்டோன்கள் (electrons and protons)
அடுத்த பூதம் காற்று. ஆகாயத்திலே முதலில் உருவான பூதம் காற்று அல்லது வாயு தான்.
எப்படி?
பிரபஞ்சத்தில் அடிப்படையானபொருள் அணு. எல்லாப்பொருட்களும் அடிப்படையில் அணுக்களால் ஆனது. அணு நியூட்ரோன், புரோட்டோன், எலக்ட்ரோன் ஆகிய மூன்று மின் காந்தக்கூறுகளால் ஆனது. குவார்க் மற்றும்
லெப்டன் என்பன இவை உருவாகக் காரணமாக அமைந்தன.
பிரபஞ்சத்தில் முதலில் உண்டான அடிப்படைப் பொருள் அணுதான். பிரபஞ்சம் உண்டான சில நிமிடங்களில் ஹைட்ரஜன் வாயுவும் தொடர்ந்து ஹீலியம் வாயுவும் உண்டாயின. அதீதமான சக்தியால் ஈர்க்கப்பட்டு மின் காந்தக்கூறுகள் ஆகாயத்தில் ஒன்றிணைந்து இவை உருவாகின.
பிரபஞ்சம் ஏற்பட்டு இருபது கோடி வருடங்களுக்கு பிறகு நட்சத்திரங்கள் ஒவ் வொன்றாக உருவாயின. அப்போது தான் முதன் முதலாக ஒளி அல்லது நெருப்பு உண்டானது . அப்படி உண்டான ஒரு நட்சத்திரம் தான் சூரியன். கற்பனைக்கு எட்டாத அளவிலான எல்லையற்ற ஈர்ப்பு சக்தி உருவாகி ஹைட்ரஜன் அணுக்களை கூட்டத்த்தோடு ஒரு புள்ளியில் குவியச்செய்து அவை கற்பனைக்கு எட்டாத அளவிலான எல்லையற்ற அழுத்தத்தால் மின் காந்தக்கூறுகளாக சிதறுபட்டு மின் காந்தக்க்கூறுகள் வேறொரு விகிதத்தில் இணைந்து ஹீலியம் என்ற இன்னொரு வாயுவாக மாறுகிறது. ஈர்க்கப்பட்ட ஹைட்ரஜன் அணுக்கள் அசுர வேகத்தில் ஒரு புள்ளியில் குவியும்பொழுது ஏற்பட்ட வெடித்து சிதறலில் தான் பூமி மற்றும் கிரகங்கள் தொலைவில் தெறித்து விழுந்து உருவாயின. ஹைட்ரஜன் ஹீலியமாக உருத்திரியும் இந்த செயல் தொடர்ந்து நடக்கிற ஒரு மாபெரும் புள்ளி தான் ஒரு நட்சத்திரம். ஹைட்ரஜன் அணு சிதறும்பொழுது அபரிமிதமான சூடும் வெளிச்சமும் உண்டாகிறது. நட்சத்திரத்தில் குவிந்திருக்கும் அனைத்து ஹைட்ரஜன் அணுக்களும் சிதறி முடியும் பொழுது நட்சத்திரம் அழிந்து விடும். சூரியனும் ஒரு நட்சத்திரம் தான். அதுவும் ஒருநாள் அழிந்துவிடும். ஒரு புழுதி அல்லது மேக மண்டலத்தின் சுழற்சியாகவே ஒவ்வொரு நட்சத்திரமும் -சூரியன் உட்பட - தோற்றமளிக்கும்.
நமது சூரியன் தோன்றி சுமார் நானூற்று ஐம்பது அல்லது நானூற்று அறுபது கோடி வருடங்கள் ஆகின்றன.
இனி சுமார் ஐநூறு கோடி வருடங்களில் சூரியனில் உள்ள ஹைட்ரஜன் அனைத்தும் சிதறி தீரும். அப்பொழுது சூரியன் என்ற மாபெரும் புள்ளி வெறும் தீக்கனலாக மாறி அதிக வெப்பத்துடன் வெடித்து விரிவடையத்தொடங்கும் ; சூடு ஆறி மிக மிக மெதுவாக குளிரத்தொடங்கும். இது பல கோடிக் கணக்கான வருடங்கள் நடைபெறும். சூரியன் விரிவடையத்தொடங்கி குளிரும் செயல் நடக்கும்பொழுது அது முதலில் புதன் சுக்கிரன் ஆகிய கிரகங்களையும் பின்னர் பூமியையும் தன்னுடைய வெப்ப வளையத்தினுள் விழுங்கும். இதற்கு எத்தனையோ வருடங்களுக்கு முன்னரே விரிந்து பரவும் சூரியனின் வெப்பத்தை தாங்க முடியாமல் பூமியில் உயிரினங்கள் அழிந்து விடும்.
சூரியன் உருவானபொழுது, ஈர்க்கப்பட்ட ஹைட்ரஜன் அணுக்கள் அசுர வேகத்தில் ஒரு புள்ளியில் குவியும்பொழுது ஏற்பட்ட வெடித்து சிதறலில் தொலைவில் தெறித்து விழுந்து தான் பூமி மற்றும் கிரகங்கள் உருவாயின. சூரியன் உருவான ஒருசில நிமிடங்களில் சூரியனில் இருந்து வெடித்து சிதறி தெறித்து தான் பூமி உருவானது. பிற கிரகங்களும் இப்படித்தான் உருவாகின. இவை சூரியனின் ஈர்ப்பு மண்டலத்தினுள் இருப்பதால் சுழற்சியில் இருக்கும் புகை மேக மண்டலமான சூரியனின் சுழற்சியுடன் இணைந்து அதனைச் சுற்றி வருகின்றன.
கடும் வெப்பத்துடன் சூரியனில் இருந்து தெறித்து எறியப்பட்ட பூமி மெதுவாக குளிரத்தொடங்கியது. அவ்வப்போது ஆங்காங்கே பூமி வெடித்து வெளியேறிய வாயுக்களால் காற்று மண்டலமும் பின்னர் வெப்பமான காற்றில் உருவான வேதியியல் மாற்றங்களால் ஏற்பட்ட சக்தியால் மின் காந்தகூறுகள் சிதறிப் பிரிந்து இணைந்து குளிர்ந்து மழையாகப் பெய்து நீரும்அதனால் நிறையப்பெற்று கடலும் உண்டாயின. இது தான் பஞ்ச பூதங்கள் உண்டான வழி.
மொத்தத்தில் இந்த பிரபஞ்சம் முழுவதும் ஆகாயம் வாயு நெருப்பு (சூரியன் முதலான நட்சத்திரங்கள் )பூமி (முதலான கிரகங்கள்) இவைகளால் நிறைந்து இருக்கின்றன.
ஆகாயம் பிரபஞ்சம் முழுவதும் எங்கும் நிறைந்து காணப்படுகிறது வாயுவும் மிகப்பெரிய அளவில்ஹைட்ரஜன் அணுக்களாகவும் சிறிய அளவில் ஹீலியம் அணுக்களாகவும் எங்கும் நிறைந்து இருக்கின்றன. நட்சத்திரங்கள் மற்றும் கிரகங்களை சுற்றி இவை வேதியியல் மாற்றங்களுக்கு உட்பட்டு வாயு அல்லது காற்றுவெளி மண்டலமாக பல்வேறு விதமான வாயுக்களுடன் நிலைபெறுகின்றன.
ஒவ்வொரு நட்சத்திரத்தை சுற்றியும் நெருப்பும் ஒரு மிகப்பெரிய வட்டத்துக்கு அதன் ஒளியும் அதனால் ஏற்படும் வெப்பமும் நிறைந்து இருக்கின்றன.
பூமியில் உள்ள அனைத்து உயிரினங்களும் அடிப்படையில் இந்த ஐந்து பூதங்களாலேயே உருவாக்கப்பட்டிருக்கின்றன.
நம் உடலை எடுத்துக்கொள்வோம். ஆகாயத்தின் அம்சம் ஆன வெட்ட வெளியான பகுதி நம் உடலுக்குள் இருக்கிறது. அது நம் உயிராகவும் இருக்கிறது.
வாயுவின் அம்சமான பிராண வாயு நம் உடல் முழுவதும் நிறைந்து இருக்கிறது. நமது இரத்தத்திலும் தசைகளிலும் இதன் அளவு சாதாரணமாக 95 சதவீதத்துக்கு குறையாமல் இருக்கவேண்டும். அப்பொழுது தான் சுவாசம் சீராக நடைபெறும். 90 சதவீதத்துக்கு குறைகிற பொழுது மூச்சு திணறல் ஏற்படும். மிகக்குறையும் பொழுது உயிருக்கே ஆபத்தாக முடியும்.
இரத்தம் , நிணநீர் முதலானவைகள் நீரின் அம்சமாக இருக்கின்றன.
வாயு மண்டலத்தை விட அதிகமான வெப்பம் எப்பொழுதும் நம் உடலில் நிலைகொள்கிறது. இதில் ஏற்படும் கூடுதல் குறைவுகள் ஆரோக்கியத்துக்கு ஊறு விளைவிக்கவோ ஆபத்தாக முடியவோ செய்கிறது.
அதாவது பஞ்சபூதங்களின் அம்சம் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட அளவில்-விகிதத்தில் நம் உடலில் தேவைப்படுகிறது. எது எது குறைகிறதோ அதை நிறைவு செய்ய வேண்டியதிருக்கிறது. எதெது தேவைக்கு அதிகரிக்கிறதோ அதை குறைவு செய்யவேண்டியதிருக்கிறது.
நமது அன்றாட செயல்பாடுகளால் நம் உடலில் பஞ்சபூத அம்சங்களில் குறைவு ஏற்படுகிறது. இந்த குறைபாடுகளை நாம் எவ்வாறு நிறைவு செய்கிறோம்?
உடல் உழைப்பினால் பூமியின் அம்சம் குறைகிறது. இதை நிறைவு செய்ய அன்றாடம் பூமியிலிருந்து உருவான உணவுகளை தேவையான அளவிற்கு உடலுக்குள் எடுத்துக்கொள்கிறோம்.
உடலுக்குள் இருக்கும் வெப்பத்தை கட்டுப்படுத்த வெயில் உபயோகப் படுகிறது. இது இயற்கையாகவே நாம் அறியாமலே நடக்கிறது. இதற்காக நம் உடலில் வெயில் பட வேண்டியதிருக்கிறது.
காற்றும் நீரும் நம் உடல் பராமரிப்பில் பெரும் பங்கு வகிக்கிறது. இதனை நம்மில் பெரும்பாலானோர் உணருவதில்லை. இவற்றிற்கு தேவையான அளவிற்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. இவை ஒவ்வொன்றும் நமது உடலை உள்ளும் புறமும் சுத்தப்படுத்தும் முக்கிய பணி ஆற்றுகின்றன.
நாம் உட் சுவாசிக்கும் காற்று பிராண வாயுவை உடசெலுத்தி இரத்தத்தின் மூலமாக உடலில் உள்ள நுண்ணுயிர் செல்களை சுத்தப்படுத்துகின்றன. இதற்கு தேவையான அளவுக்கு நாம் பிராண வாயுவை உடகொண்டு செல்களிலிருந்து அழுக்குகளை சேகரித்துவரும் கரியமில வாயுவை முழுவதுமாக வெளியேற்ற வேண்டும். இதனை நாம் சீராக நடைபெற அனுமதிக்கிறோமா? அது மட்டுமல்ல. நம்முடலில் தோலில் உள்ள நுண் துவாரங்கள் வழியாகவும் நம் உடலுக்குள் பிராண வாயு பிரவேசிக்கிறது.
எந்த அளவிற்கு இரத்தம் மூலமாக பிராண வாயு உடலுக்கு தேவையோ அந்த அளவுக்கு தோல் வழியாகவும் பிராண வாயு நம் உடலுக்கு தேவைப்படுகிறது.
அடுத்தபடியாக நீர். நமது உடல் உழைப்பால் வெப்பம் அதிகரிக்கிறது. அப்பொழுது உடலில் உள்ள நீர் அந்த வெப்பத்தை உள்வாங்கி வியர்வையாக வெளியேற்றுகிறது. அவ்வாறு வெளியேற்றும்பொழுது செல்களின் கழிவுகளையும் சேகரித்து சிறுநீரகவும் வியர்வையாகவும் வெளியேற்றுகிறது. இதற்கு தேவையான அளவிற்கு நாம் தினமும் நீர் பருக வேண்டும். உடலின் வெளிப்புறமாகவும் நீரின் தேவை இருக்கிறது. தொழில் உள்ள நுண் துவாரங்களை அழுக்கு நீக்கி சுத்தம் செய்கிறது. இதற்காக நாம் குளிக்கிறோம்.
நாம் குளிப்பதன் பலன் இது மட்டுமல்ல. இது உடல் வெப்பத்தை தணிப்பதுடன் உடலின் வெளிப்புறமாக அமைந்திருக்கும் நம் சக்தி மண்டலத்தில் மன எண்ணங்களால் அல்லது எண்ணச்சிதறல்களால் உருவாகும் வெப்பத்தையும் கட்டுப்படுத்துகிறது. இது நம் மனதின் வெப்பத்தை தணிக்கிறது. சக்தி மண்டலம் அல்லது மனம் வெப்பமடையும்பொழுது அதன் செயல்படும் சக்தி குறைகிறது; தளர்வு ஏற்படுகிறது. குளிப்பது இதை சீராக்குகிறது. மனதிற்கு செயல்படும் திறன் அதிகரிக்கிறது. சரியான முறையில் குளிப்பதால் மட்டுமே நல்ல பலன் ஏற்படும். இது எப்படி ? சரியாக முறையாக குளிப்பது எப்படி? சரியாக வாயுவை உட்க்கொள்வது எப்படி? விளக்கம் இனி வரும் .
நம் உயிர் ஆகாயத்தின் அம்சம். இது மனதின் தியானப்பயிற்சியின் மூலம் உடல் அழியும்வரையில் சீறாகப் பாதுகாக்கப்படுகிறது.
தொடர்ந்து படியுங்கள். நன்றி வணக்கம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக