Chanting and spiritual uplift - 2 மந்திர உச்சாடனம் : ஆன்மீக உணர்வு -2
ஆத்மாவை உணர்வது என்பது கடவுளை உணர்வது; அறிவது .
இந்த உணர்வின் அனுபவத்தை உணர்ந்த ஒருவர் இன்னொருவருக்கு சொல்லிக்கொடுத்து அல்லது கற்றுக்கொடுத்து உணரவைக்க இயலாது. வெறும் காட்சி மட்டும் உணர்வையும் அனுபவத்தையும் ஏற்படுத்திவிடாது. அதாவது பக்தி என்பது வெறும் காட்சியை மட்டுமே அடிப்படையாகக் கொண்டது. காட்சி மனதை ஈர்த்து நம் வசப்படுத்தும்; நம்மை உணர்ச்சி வயப்படுத்தும். மனம் தன் வயப்படுவது முதல் நிலை. இறைவன் என்கிற தத்துவத்தை உணர்வதற்கான ஆரம்ப நிலையும் அதுவே.
கோவில், விக்ரஹம் வேண்டும். இவற்றை பராமரிக்கவேண்டும். அலங்கார அபிஷேகங்கள் செய்வதாற்கான பொருட்கள் வேண்டும். இவற்றுக் கெல்லாம் பணம் தேவை. இந்த பக்தி நிலை பணத்தை அடிப்படையாகக் கொண்டது. இவற்றை எளிமையாகவும் செய்யலாம் ஆடம்பரமாகவும் செய்யலாம். அவரவர் பண வசதியைப் பொறுத்து பிரமாண்டமாகவும் செய்யலாம். யாரோ ஒருவர் பணம் செலவழிக்க அநேகம் பேர் அதை அனுபவிக்கலாம். ஆனால் பணம் தேவை என்பது அடிப்படை.
பணமும் அகங்காரமும் சாதாரணமாக இணைந்தே இருக்கும். நான் என்னும் உணர்வு இணைந்தே இருக்கும். இந்த உணர்வு தன்னை உயர்த்திக் காட்டுவதாகவும் இருக்கலாம்; அல்லது தன்னை இறைவனுக்கு அடிமைப்படுத்திக்காட்டுவதாகவும் இருக்கலாம். மிக எளியவனாக தன்னை வெளிப்படுத்தலாம். இவை எல்லாமும் 'நான் ' என்பதில் அடக்கம். இந்த நிலையில் சிலர் விதிவிலக்காகவும் இருக்கலாம்.
பக்தி என்ற முதல் நிலையிலேயே நீண்ட நாட்கள் நிலைத்து நிற்பது நான் என்கிற எண்ணத்தை நிலைநிறுத்தும். நாட்கள் செல்லுந்தோறும் அஹங்காரம் வளரும். மனம் உணர்ச்சி வயப்படும். மனம் உணர்ச்சி வயப்படும் முன்னர் அதனை உணர்வு வழிப்படுத்த வேண்டும் .
இறை வழியில் ஆரம்ப நிலையான பக்திக்கு அப்பாற்பட்ட இரண்டாவதான நிலை என்ன. ஒளியில் இருந்து ஒளியின் இடத்திற்கு இப்பொழுது வருகிறோம் ஒலிக்கு அடிப்படை அமைதி. ஒலி என்பது மந்திர உச்சாடனம்.
இதற்கு பக்தியின் மூலம் தன் வயப்பட்ட மனமும் தகுந்த இடமும் நேரமும் மட்டும் போதுமானது.
காட்சிகளால் ஈர்க்கப்பட்டு தன் வசப்பட்ட மனதை, அடுத்தபடியாக இறைவனை உணருவதற்கு பழக்கப்படுத்த வேண்டும். இதற்கு மந்திர உச்சாடனம் பயன்படும்.
மந்திரம் என்றால் என்ன?
வாயால் உச்சரிக்கும் ஒலி. அதுவே மந்திரம்
ஒளியும் ஒலியும் இறைவனை உணரும் பாதையில் தவிர்க்க முடியாதவைகள்.
தீபமாகிய ஒளி முதல் நிலையில் வரும். ஒலி இரண்டாவதும் அதன் அப்புறமான நிலைகளில் எல்லாம் முதன்மையான இடம் வகிக்கும்.
மந்திரம் என்பது வேதங்களிலிருந்து அல்லது சுலோகங்கள் அல்லது சுலோகங்களிலிருந்து தான் எடுக்கப்படவேண்டும் என்பதில்லை. அப்படியும் எடுக்கலாம். ஒன்றோ இரண்டோ அல்லது அதற்கு மேற்பட்ட எழுத்துக்களால் மந்திரம் அமையலாம். ஓதுபவரால் எளிதில் சிரமமின்றி உச்சரிக்கக் கூடியதாக அமைய வேண்டும் என்பது தான் முக்கியம். மனதிற்கு இசைந்த பிடித்தமான சொல் அல்லது ஓசை ஆக இருந்தாலே போதுமானது. ' ம்' என்ற ஒரு எழுத்தாக இருக்கலாம் ஓம் என்ற இரண்டு எழுத்தாக இருக்கலாம். ராம் முதலான நாமங்களில் ஒன்றாக இருக்கலாம்.
மனம் ஒருநிலையை அடையாமல் ஜெப மாலையை வைத்துக்கொண்டு பலரும் உருவிடுவதை பார்த்திருக்கிறேன். வாய் ஜெபிக்கும். கை மாலையை உருட்டும். மனம் எங்கோ சஞ்சரித்துக் கொண்டிருக்கும். இதனை அவர்கள் முகம் காட்டிக்கொடுக்கும்.
ஆகையால் மனதை நிலை நிறுத்திப் பழகிய பிறகு மந்திர உச்சாடனம் செய்வதே பயன் தரும். இல்லை என்றால் மன அழுத்தம் குறைவதற்கு பதிலாக அதிகரிக்கவே ஏதுவாகும்.
மந்திரத்தை முதலில் சிறிய சப்தத்தில் திரும்பத் திரும்ப படித்து மனதில் பதிய வைக்கவேண்டும். ஆரம்பத்தில் சிறிய சப்தத்தில் படித்தால் மட்டுமே மனதில் உரைக்கும். இல்லை என்றால் மனம் ஏற்காது. தொடர்ந்து மந்திரம் சிறிய சப்தத்தில் படித்து வர அது மனதில் நிற்கும்.
இதன் பின்னரே உருவிடல் தொடங்கவேண்டும். உருவிடல் என்பது நிதானமாக சிறிய சப்தத்தில் உதட்டளவில் திரும்ப திரும்ப சொல்வது. சில காலம் பொறுமையாக செய்யவேண்டும். தளராமல் செய்யவேண்டும். பலன் கிடைத்ததா என்ற சோதனையில் இறங்கக் கூடாது . நாட்பட நாட்பட நாம் அறியாமலேயே உணர்வதற்கான எந்த வித முயற்சியும் இல்லாமலேயே பலனை உணரத்தொடங்குவோம். [பொறுமையும் முடிந்த வரையில் இடைவிடாது தொடர்ந்து ஈடுபடுவதும் நல்லது..
தினமும் இதற்காக ஒரு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கிக் கொள்ளவேண்டும். அந்த நேரத்தில் உருவிடல் தினந்தோறும் செய்யவேண்டும். என்றென்றும் இக்குறித்த நேரத்தில் செய்யவேண்டும். தினமும் காலையில் எழுந்த உடன் பல் தேய்ப்பது போல. குறிப்பிட்ட நேரங்களில் உணவருந்துவதுபோல. அன்றாடம் தவறாமல் செய்யவேண்டும். ஒரு வேலையை தினமும் குறித்த நேரத்தில் செய்யும்போது, நம் உடலும் மனமும் அந்த குறிப்பிட்ட நேரத்தில் அதை ஏற்றுக்கொள்ளத் தயாராகி விடுகிறது. தினமும் எந்த நேரத்துக்கு சாப்பிடுகிறோமோ அந்த நேரத்துக்கு பசி ஏற்படுவது போல.
தினமும் மந்திரம் உருவிட்டு பழகி வரும்பொழுது அந்த மந்திரம் வெகு இயல்பாக நம் நாவில் இருந்து வெளிப்படுகிறது. நாளடைவில் இந்த இயல்பான ஓசை வெளிப்பாட்டில் ஒரு ரிதம் (சுருதி) உண்டாகிறது. இந்த ரிதம் அலை அலையாக ஓங்காரத்தை வெளிப்படுத்துகிறது. இந்த ஓங்காரம் நம் காதுகளில் ரீங்காரமிடுகிறது. காதுகளில் கவனத்தை நிறுத்துங்கள். உச்ச்சாடனததை கவனியுங்கள். இந்த ரீங்காரம் நமது உடலில் ஒவ்வொரு அங்கத்திலும் நம் உடலில் வாழும் ஒவ்வொரு நுண் உயிரிலும் அதிர்கிறது.
இந்த அதிர்வுகள் நம் உடலில் ஆத்மாவை உணர்த்துகின்றன. நம் உயிருக்கும் ஆத்மாவிற்கும் இடைப்பட்ட இடைவெளி குறையத்தொடங்குகிறது.
சில பல மாதங்களில் இந்த மந்திரம் நம்முடன் ஒன்றி விடுகிறது.
இன்ன நேரம் என்றில்லாமல் நம்மை அறியாமல் சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் நம் மனதில் உருவிடப்படுகிறது.
அப்படி ஒன்றிப்போன பிறகு பலவாறாக இந்த மந்திரத்தை பயன்படுத்தலாம். காலையில் எழுந்தவுடன் ஒரு மூன்று முறை உச்சரிக்கலாம். அந்த நாளில் பிரச்சினைகள் எதுவானாலும் சிரமத்தை தராது. நீங்களோ அல்லது வீட்டில் உள்ள யாராவது வெளியே போகும்பொழுது நீங்கள் மூன்று முறை உருவிடலாம். அதனால் வெளியே போகிறவர்கள் எந்த பிரச்சினைகளையும் நேரிடாமல் தடை செய்யவோ அதன் பாதிப்பை குறைக்கவோ ஏதுவாகும். இவ்விதம் உங்கள் உசிதம் போல் தேவைகளுக்கு அவ்வப்போது பயன்படுத்திக் கொள்ளலாம். நாளடைவில் இந்த மந்திரம் உங்கள் உடலோடு ஒட்டி இருக்கும் ஒரு அங்கமாகவே மாறிவிடும்.
மந்திர உச்சாடனம் செய்யும்பொழுது கவனிக்கவேண்டிய விஷயங்கள் என்னென்ன என்பது தனியாக இன்னொரு வலைப்பூவில் விபரமாக படிக்கலாம்
தொடர்ந்து படியுங்கள். kitturengasamy.blogspot.com என்று கூகுள் மூலம் நுழையலாம். நன்றி. வணக்கம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக