பிரம்மச்சர்யம் - ஒரு உண்மை பொதிந்த எளிய விளக்கம் Genuine Simple and Realistic Explanation of Celibacy .
பிரம்மம் என்பது பொதுவாக material அல்லது பொருளை குறிப்பிடும் சொல். இங்கே அதனை உடல் என்று அர்த்தம் கொள்ள வேண்டும். சர்ய (charya )
என்பதற்கு ஒழுக்கம் அல்லது அனுசரணை என்று பொருள். உடலை ஒழுக்கத்துடன்
பாதுகாப்பது தான் பிரம்மச்சர்யம் எனப்படும்
இதுவே இதன் எளிமையான விளக்கம்.
ஆகவே உடலை ஆரோக்கியமாக பாதுகாப்பதையே பிரம்மச்சர்யம் என்கிறோம். பிரம்மச்சர்யம் என்கிற வடமொழி சொல்லுக்கு தமிழில் உடல் ஒழுக்கம் என்பதே பொருந்தும்.
வார்த்தைகளுக்கு அர்த்தம் எடுப்பதில் இங்கு சிக்கல் எதுவும் இல்லை.
உடலை ஆரோக்யமாக
பாதுகாப்பதற்கு என்னென்ன ஒழுக்கங்களை கடைபிடிக்க வேண்டுமோ அந்த ஒழுக்கங்களை
கடைபிடித்து உடலை சீராக பாதுகாப்பது என்பது தான் இதனால் உணரப்படுகிறது.
இதனையே ஆண் பெண் தொடர்பு அறவே இல்லாமல் இருப்பது தான் பிரம்மச்சர்யம் என்று தவறாக வியாக்யானித்து குழப்பி விட்டிருக்கிறார்கள். ஆண் பெண் தொடர்பே ஆகாது என்பது அதன் பொருள் அல்ல.
மனித இனத்துக்கு அடிப்படையே ஆண் பெண் தொடர்பு தானே. எதற்காக ஆணும் பெண்ணும் படைக்கப்பட்டிருக்கிறார்கள். இன வளர்ச்சிக்கு அடிப்படையே உடல் தொடர்பு தானே. அதனை தவறான ஒன்றாக எப்படி கருத முடியும்.
ஒழுக்கம் எதற்காக கடைபிடிக்கிறோம். சிக்கல்கள் இடைஞ்சல்கள் பிரச்சினைகள் எதுவும் ஏற்படாமல் இருப்பதற்காகவே ஒழுக்கத்தை கடைபிடிக்கிறோம். திருமண அல்லது குடும்ப வாழ்க்கை என்பது ஆண் பெண் உறவினால் ஏற்படும் சச்சரவுகளையும் பிரச்சினைகளையும் தவிர்ப்பதற்காக ஏற்பட்ட ஒழுக்க முறைதான். தேவை இல்லாத நேரங்களில் பாலியல் உணர்ச்சிகள் ஏற்பட்டு அசம்பாவிதங்கள் உண்டாவதை தவிர்க்க ஏற்பட்ட ஒழுக்கமுறை தான் ஆடை அணிவது.
உடலின் வளர்ச்சிக்கும் ஆரோக்கியத்திற்கும் உடல் உறுதிக்கும் எந்தவித இடைஞ்சலும் ஏற்படாமல் இருக்க வேண்டும். அதற்கு என்னவெல்லாம் செய்யவேண்டுமோ அவற்றை எல்லாம் ஒழுக்கத்துடன் செய்ய வேண்டும். இவ்விதம் உடலை பேணி பாதுகாக்கவேண்டும். இந்தவிதமான ஒழுக்க முறைதான் பிரம்மச்சர்யம் அல்லது உடல் ஒழுக்கம்.
பஞ்ச பூதங்களால் ஆனது உடல். அன்றாட இயக்கத்தால் உடலில் ஐம்பூதங்களின் இழப்பு ஏற்படுகிறது. உடலுக்கு தேவையான நேரத்தில் தேவையான அளவுக்கு அவற்றின் குறைவு நிறைவு செய்யப்பட வேண்டும். உடலின் அன்றாட இயக்கங்களை முறைப்படுத்தி ஐம்பூதங்கள் உடலில் தேக்கமடையால் பார்த்துக்கொள்ள வேண்டும். தொடர்ச்சியான தேக்கம் உடலில் இறுக்கத்தை ஏற்படுத்தும். நாளைடைவில் உடல் இயக்கம் பாதிக்கப்பட்டு நோய் ஏற்பட ஏதுவாகும்.
நிலத்தின் அம்சம் உணவு. அதில் எது தேவையோ எப்பொழுது தேவையோ அப்பொழுது அதனை தேவைக்கேற்ப உணவாகஉட்கொள்ளவேண்டும்.
நான்கு சுவர்களுக்குள் அடைந்து கிடைக்காமல் வெட்ட வெளியில் தேவைக் கேற்ப வெயில் கொள்ளவேண்டும். வெளிச்சமும் சூடும் நெருப்பின் அம்சம்.
தேவையான அளவிற்கு சுத்தமான காற்றை உட்கொள்ளவேண்டும். காற்றோட்டமான இடத்தில அமரவேண்டும். நம் உடலின் மேற்புறத்தில் காற்று தழுவிச் செல்லவேண்டும். அதனை நாம் அனுபவிக்கவேண்டும்.
தேவைக்கு அவ்வப்போது நீர் அருந்தவேண்டும். இது உடலின் நீர் இழப்பை சரி செய்யும். குளிர்ந்த நீரில் அனுபவித்து நீராடவேண்டும். இது உடலின் சூட்டின் தேக்கத்தை மட்டுப் படுத்தும்.
இவ்விதமாக நம் உடலில் நிலம், நெருப்பு, காற்று, நீர் என்கிற நான்கு பூதங்களின் இருப்பை சமநிலையில் நிலை நிறுத்துகிறோம்
ஐம்பூதங்களில் இன்னும் ஒன்று மீதம் இருக்கிறது.
ஆகாயம். சூன்யம். இல்லை என்று நிற்கும் ஒன்று. இன்னதென்று அறிய முடியாத ஒன்று. அதன் அம்சம் தான் நம் மனம். அதுவும் இல்லை என்று நிற்கும் ஒன்றுதான். இன்னதென்று அறிய முடியாத ஒன்றுதான்.
மனதின் இயக்கத்திற்கு சக்தி தேவை. இயக்கத்தினால் குறையும் சக்தி நிரப்பப்பட வேண்டும். அப்பொழுது தான் மனம் புத்துணர்வு பெறும். ஆகாயமும் சக்தியும் இணையும்போது தான் மற்ற நான்கு பூதங்களும் பிறக்கின்றன. சக்தியுடன் இணையும்போது தான் ஆகாயம் ஆற்றல் பெறுகிறது.
மேற்சொன்ன அடிப்படையில் மனம் ஆற்றல் பெற்று புத்துணர்வு பெற ஆணும் பெண்ணும் இணைய வேண்டும் . இதனையே காமம் என்கிறோம்.
உடல் உறவின்போது இன விருத்திக்கு அப்பாற்பட்டு, சக்தி அடிப்படையில் என்ன நடக்கிறது ?
ஆணின் உபரிதளத்தில் எஞ்சி நிற்கும் நேர்மறை சக்தியும் பெண்ணின் உபரிதளத்தில் எஞ்சி நிற்கும் எதிர்மறை சக்தியும் தம்மில் இணைந்து இருவரின் உபரி தளத்திலும் சக்தி சமநிலை ஏற்படுகிறது. அதாவது. மனதில் சமநிலை ஏற்படுகிறது. மனதின் பலமே அதன் சம நிலைதான். உடல்களின் உரசலில் இந்த சக்திகள் கலப்பு நிகழ்கிறது. அதிலே மனது புத்துணர்வு அடைகிறது.
உணவுக்கு பசி, நீருக்கு தாகம், காமத்துக்கு வேட்கை. இவை எல்லாம் இயற்கை. ஆக இந்த இணைவு ஒரு கட்டாய தேவை. மனம் குறைவற்ற ஆற்றலுடன் இருந்தால் மட்டுமே பிற நான்கு பூதங்களால் அமைந்த உடல் சமநிலை பெற்று ஆற்றலுடன் இயங்க இயலும்.
மிதமான ஆண் பெண் உடலிணைவு, உடலுறவு மனதின் ஆற்றலை வளர்த்து உடலின் பஞ்சபூத சமநிலையை மேம்படுத்தும். ஆகாயத்தின் அம்சமாகிய மனமே உடலில் பிற பூதங்களின் அம்சங்களின் இயக்கத்தை கட்டுப் படுத்துகிறது. ஆகவே மனதின் சமநிலை அடிப்படை தேவை ஆகிறது.
அமிதமான உணவு, அமிதமான காற்று,அமிதமான வெயில் அல்லது சூடு,
அமிதமான நீர் என்று அமிதமான அளவில் நாம் உட்கொள்ளும் அனைத்துமே நம் உடலுக்கு நோயைத்தரும். சமநிலைக்கு ஊறு விளைவிக்கும். உடல் இயங்க முடியாத ஒரு தேக்கநிலையை ஏற்படுத்தும்.
அமிதமான உடலுறவு ஈடுபாடு மனதின் ஆற்றலை அழிக்கும். உடலின் பஞ்சபூத சமநிலையை தகர்க்கும் . அதனால் உடல் இயக்கத்தில் தேக்கம் உண்டாகும். மூளையின் இயக்கத்திலும் தேக்கம் ஏற்படும். எனவே உடலுறவு கட்டுப்பாடு ஆரோக்யமான உடலுக்கு பிறவற்றைவிட மிக மிக முக்கியம் என்பது தெளிவாகிறது.
உட ல்
வலுவிழக்கும் அளவிற்கு உடல் உறவில் அமித ஈடுபாடு ஆகாது என்பது தான் விளக்கம்.
நைஷ்டிக பிரம்மச்சர்யம் என்பது குறிப்பிட்ட சில நிஷ்டைகளுடன் சுயகட்டுப்பாடுகளுடன் பிரம்மச்சர்யத்தை அனுசரிப்பது
என்பது பொருள். அதாவது குறிப்பிட்ட சில ஒழுக்கங்களுக்கு முக்கியத்துவம்
கொடுத்து பிரம்மச்சர்யம் அனுசரிப்பது என்பது தான் விளக்கம்.
உதாரணத்திற்கு குறிப்பிட்ட உணவுகளை மட்டும் உண்பது, குறிப்பிட்ட இடத்தில மட்டும் வசிப்பது, ஏகபத்தினி தாம்பத்யம் மிதமாக அனுபவிப்பது, அல்லது
மனைவியருடன் மட்டும் தாம்பத்யம் நடத்துவது முதலான குறிப்பிடும் படியான ஒழுக்கங்கள்.
பிரம்மா நாரதரிடம் ஸ்ரீ கிருஷ்ணர் நைஷ்டிக பிரமச்சாரி என்று சொன்னதன்
காரணத்தை துர்வாசர் பின் வருமாறு விளக்குக்கிறார்.
ஸ்ரீ கிருஷ்ணர்
ராதையுடன் எவ்வளவு நெருக்கமாக பழகினாலும் அவர்களிடையே உடல் சம்பந்தமான உறவு
இருக்கவில்லை. அந்த அளவுக்கு அவரிடம் பிரம்மச்சர்யத்தில் நிஷ்டை
அல்லது ஒழுக்கம் இருந்தது என்று அவர் நாரதரிடம் விளக்குகிறார்.
தவிர்க்க இயலாத சூழ்நிலை ஏற்பட்ட போதும் அவர் மனைவியர் அல்லாத இன்னொரு பெண்ணிடம் நெருக்கமாக இருந்தும் கூட உடலுறவில் ஈடுபடவில்லை என்பது சிறப்பாக குறிப்பிடப்படுகிறது. இது ராதைக்கும் கிருஷ்ணருக்கும் பொருந்தும்.
ஆண் பெண் உடல் உறவைத் தவிர்த்த ஒரு பிரம்மச்சர்யம் பூரணமான பிரம்மச்சர்யம் ஆகாது. பிரம்மச்சர்யத்தில் ஆண் பெண் உறவு ஒரு தவிர்க்கக்கூடாத அம்சமே.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக