சொந்தங்கள் -உறவுகள் - relations
உலகில் உயிர் பெற அடிப்படைக்காரணம் அப்பா.
அவர் செலுத்திய சுக்கிலம் தான் காரணம். அந்த சுக்கிலத்தை தனது சுரோணிதத்தால் பண்படுத்தி உடல் எடுப்பதற்கு இடம் கொடுத்து வளர உதவியவர் அம்மா.
இந்த இருவர் தவிர நாம் பெற்ற உடலால் வேறு உறவினர் ஆவது யார்?
இந்த குழந்தையை உருவாக்க வேண்டும் என்று குறிப்பாக எண்ணிஎந்த அப்பாவும் ஒரு குறிப்பிட்ட குழந்தையைப் பெறுவதில்லை.
ஒரு ஆத்மா தான் உடலெடுப்பதற்காக ஏற்கெனவே உடலெடுத்த ஒரு ஆத்மாவின் உடலை பயன்படுத்துவது இயற்கை அல்லது கடவுள் என்னும் அடிப்படைத் தத்துவம்
அதற்காக ஆண் பெண் தம்மில் ஈர்ப்பு இயற்கையாகவே தவிர்க்கமுடியாத வகையில் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு மனிதனிடமும் ஆண் ஆனாலும் பெண் ஆனாலும் எவ்வித வித்தியாசம் இல்லாமல் உடலுறவு வேட்கை தன்னிச்சையாக ஏற்படுகிறது. இதற்காக எந்த தனி முயற்சியோ அல்லது அறிவுறுத்தலோ கல்வியோ ஒருபொழுதும் தேவைப்படுவதில்லை.
ஆண் பெண் சேர்க்கை அல்லது உடலுறவு நிகழ்கிறது. அதனால் ஒரு கரு உருவாகிறது. ஏதோ ஒரு ஆத்மா அந்தக் கருவினுள் புகுந்து உயிர் கொடுக்கிறது. ஒரு புது மனிதன் அல்லது ஜீவன் உருவாகிறது.
எந்த ஆத்மா எந்த ஆண் பெண் மூலம் உடல் எடுக்கிறது என்பது பூர்வ புண்ணியம் அல்லது பாபம் சம்பந்தப்பட்டு நிகழ்கின்றது. ஒவ்வொரு ஆத்மாவிலும் அமைந்திருக்கும் சக்தியின் நேர்மை எதிர்மையின் விகிதாசாரத்தைப் பொறுத்தது இது. இந்த விகிதாசாரத்திற்கு இணையான அல்லது அதன் ஈர்ப்புக்கு உட்படுகிற விகிதாசாரம் அமைகிற ஒரு தாய் தந்தையருக்கு அந்த ஆத்மா குழந்தையாகப் பிறக்கிறது.
பாபம் என்பது எதிர்மறை சக்தி அலைகள். புண்ணியம் என்பது நேர்மை சக்தி அலைகள். நேர்மை, எதிர்மை என்பது சக்தியின் இருவேறு நிலைகள்.
எதிர்மை ஒன்று இருப்பதுதான் நேர்மையின் மகத்துவத்துக்கு காரணம். துன்பம் அனுபவித்த உடன் இன்பம் வரும்பொழுது தான் இன்பத்தை உணர்வுபூர்வமாக உணரமுடியும். தொடர்ந்து இன்பத்தில் திளைக்கும்
பொழுது, அந்த இன்பத்தை முழுமையாக உணர்வுபூர்வமாக உணர இயலாது.
ஆகவே அப்பா அம்மா குழந்தை (மகன் அல்லது மகள்) என்பது முதல் நிலை உறவு. உடன் பிறந்தோர் இரண்டாம் நிலை உறவுகள். முதல் நிலை உறவின் அடிப்படை வலுவானது . இரண்டாவது நிலை உறவுகளின் நிலை விடுபட்டு நிற்பது. பெயரர்கள் அதாவது பேரர்கள் மூன்றாம் நிலை உறவுகள்.
நான் என்ற நிலையிலிருந்து வேறுபட்டு நிற்பது தான் உறவு என்ப

தை இங்கு குறிப்பிடவேண்டியது அவசியமான ஒன்று. நான் என்பது பிரிக்க முடியாத தன்மையது அது சிதைக்கும்பொழுது அல்லது அது சிதைக்கப் படும் பொழுது அது வேறுபட்ட அல்லது மாறுபாடானஇன்னொரு நிலையை எய்துகின்றது .
நான் என்பது சூக்ஷ்ம ஸ்தூல தொடர்புகளின் கலவை. ஆனாலும் நான் என்பதுவேறு. எனது உடல் என்பது வேறு. உறவுகள் உடலுக்கு மட்டுமே ஆத்மாவிற்கு அல்ல.
அப்பா அம்மா உட்பட அடுத்த நிலை உறவுகள் எல்லாமே அற்றுப்போகும் வாய்ப்புக்கு உட்பட்டது.

உடலுக்கு உயிர் உள்ளபோதே. இந்த உறவினர்கள் உயிருடன் இருந்தாலும் கூட எந்த நேரத்திலும் இந்த உறவுகள் அற்றுப்போகும் வாய்ப்புகள் மிக மிக அதிகம். அதாவது இந்த உறவுகள் எல்லாமே நிலையற்றவை தான்..
இந்த உறவுகள் அற்றுப்போவதற்கு இந்த காலத்தில் முக்கிய காரணம் பணம். பணம் நிறைய வைத்திருப்பவன் அது இல்லாத உறவினருக்கு கொடுப்பதில்லை. இல்லாதவர்களும் கூட பணம் சம்பந்தமான பிரச்சினைகள் வருகிறபொழுது உறவைவிட பணத்தையே அல்லது பணக்காரனையே பெரிதாக மதிக்கின்றனர். உறவுகள் முறிக்கின்றன; உறவுகள் முறிகின்றன .

உறவை விட பணம் தான் அவர்களுக்கு பெரிது என்று இரு சாராருமே ஒருவரை மற்றவர் குற்றம் சொல்லிக்கொள்வார்கள். ஆனால் இருசாராருமே உறவுக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை; பணத்துக்குத்தான் முக்கியத்துவம் கொடுத்தார்கள் என்பது தான் உண்மை. ஏதோ ஒரு சாரார் பணத்தைவிட உறவுக்கு முக்கியத்துவம் கொடுத்து இருந்தால் உறவுகள் முறிந்து இருக்காது. ஆனால் உறவுகள் முறிந்து விட்டன. ஏன்?
இதில் வியப்பதற்கு ஏதுமில்லை . உறவுகள் வெறும் உடல் சம்பந்தப் பட்டவையே, ஆத்மா சம்பந்தப்பட்டதில்லை என்பது தான் காரணம்; வேறொன்றுமில்லை
இதற்கு அப்பாற்பட்ட உறவுகள், அதாவது உடன்பிறந்தோர் சந்ததி வழி உறவுகள், ரத்த சம்பந்தமற்ற கடைநிலை உறவுகள். இவர்களுடன் உறவுகள் காலப்போக்கில் குறைந்து குறைந்து அற்றுப்போய் விடுகின்றன .சந்ததிகளுடன் தொடர்பு கொள்ளும் சந்தர்ப்பங்கள் காலப்போக்கில் குறைந்து போவதால் நாமே அறியாதபடி அற்றுப்போகும் வாய்ப்புகள் தான் மிக மிக அதிகம்.
சமூகம் அங்கீகரித்த கணவன் மனைவி என்பது இடைநிலை உறவு. நேரடியான ரத்தசம்பந்தம் அற்றது. இது கட்டாயத்தேவையால் ஏற்படுகிற ஒரு உறவு. இது பாலியல் ஈர்ப்ப்பின் அடிப்படையில், பிரபஞ்ச தத்துவ அடிப்படையில் அமைவது. ஆனால் கணவன் மனைவி என்ற நிலையில் இருந்து அப்பா, அம்மா, மக்கள் என்றஎன்கிற அடுத்த நிலையை அடையும்போது இது முதல் நிலை உறவாக மாறுகிறது.
அங்கீகாரமற்ற ஆண் பெண் உடலுறவு என்பது தற்காலிக உறவு மட்டுமே. அது முதல்நிலை உறவாக மாறுவதில்லை.
இன்னும் பல நிலை உறவுகள் இருக்கின்றன. நட்பு நிலை உறவுகள். தொழில் (தொடர்பு) நிலை உறவுகள். இவை ஏதோ ஒரு காரணத்தின் அல்லது தேவையின் அடிப்படையில் அமைபவை. அதாவது எதிர் மறை சக்தியின் அடிப்படையில் அமைபவை. இவை மிகவும் வலுவானவை. அதே சமயத்தில் அந்த அளவுக்கு வலுவற்றவையும் கூட. தேவை அல்லது காரணம் அடிபட்டு போகிற நிலையில் இவை வலு இழந்து போகும்.

முதல் நிலை, இரண்டாம் நிலை மூன்றாம் நிலை உறவுகள் கூட ஒரு காரணத்தின் அல்லது தேவையின் அடிப்படையில் மிகவும் வலுப்பெறும் வாய்ப்புகளும் வாழ்க்கையில் மிக மிக அதிகம். அந்த காரணத்துக்கு பங்கம் ஏற்படுகிற நிலையில் முற்றிலும் அற்றுப்போகவும் வாய்ப்புகள் உண்டு. இவற்றை எல்லாம் நம் வாழ்க்கை அனுபவங்களை அலசிப்பார்க்கும் பொழுது உணர இயலும்.
வாழ்க்கையும் உறவுகளும் ஒரு ரயில் பயணத்துக்கு ஒப்பானது.
உதாரணத்துக்கு என்னை எடுத்துக் கொள்வோம். ஒரு ரயில் நிலையத்தில் நான் ஏறி ஒரு பெட்டியில் ஓர் இடத்தில அமர்கிறேன். யார் அருகில் அமர்கிறேனோ அவர்கள் எனது அப்பா அம்மா என்று வைத்துக் கொள்ளுங்கள். அவர்களுக்கு அடுத்தாற் .போல் இருப்பவர்கள் எனது தாத்தா பாட்டிகள் என்று கொள்ளலாம். மேலும் பலர் பெற்றோர் வழி உறவினர்கள் அடுத்தடுத்து இருப்பார்கள். இவர்களில் யாரெல்லாமோ அவர்கள் இறங்க வேண்டிய ஒவ்வொரு இடங்களில் இறங்குவார்கள். இன்னும் பயணிகளில் சிலர் நம்மிடம் வந்து பழகுவார்கள். இவர்கள் நண்பர்கள் எனக் கொள்ளலாம். ஒவ்வொரு நிலையங்களில் இன்னும் ஒருசிலர் ஏறி நம் அருகில் அமர்வார்கள் அவர்கள் உடன் பிறந்தோர் என்று கொள்ளலாம்.
நான் என்னுடைய நெருக்கடியான இடத்தில இருந்து எழுந்து இன்னொருவர் அருகில் இருக்கும் காலி இடத்தில சென்று அமர்கிறேன் . அவர் தான் என் மனைவி அல்லது கணவர். பின்னர் இன்னும் சிலர் எங்கள் அருகில் அமர்வார்கள் இவர்கள் என் குழந்தைகள். பயணிகளில் யாரெல்லாமோ எந்தெந்த நிலையங்களிலோ இறங்கி போவார்கள். அவர்களில் நமது தாத்தா பாட்டிகள், அப்பா அம்மாக்கள், பிற உறவினர்கள் முதலானோர் இருப்பார்கள். அதனைப்பற்றி நாம் கவலைப்படுவதில்லை. அதாவது பயணத்தில் பலரும் முன் அறிமுகம் இல்லாமல் வந்தவர்கள் ஓவ்வொருவரும் அவரவர்கள் இறங்கவேண்டிய இடத்தில இறங்கிப் போகிறார்கள். நமக்கு பிறகு ஏறியவர்கள் கூட நாம் இறங்கும் முன்னரே இறங்கிப் போவார்கள். அதன் பிறகு அவர்களில் பெரும்பாலோரை சந்திக்கும் வாய்ப்பு கிடைப்பதில்லை . அத்துடன் அவர்களை மறந்து விடுகிறோம். இது தான் இந்த வாழ்க்கையில் உறவுகளின் பிணைப்பு.
அவரவர்கள் ஒவ்வொரு காரணத்துக்காக இந்த ரயில் என்ற உலகத்துக்குள் வருகிறார்கள். அது முடிவடைந்தவுடன் அதில் இருந்து இறங்கிபோகிறார்கள். அவர்கள் வந்த காரணம் எதுவாக இருந்தாலும் நாம் அதனைப் பற்றி கவலைப்படுவதில்லை. அவர்களையும் அத்துடன் மறந்து விடுகிறோம்.
அதே ரயிலில் அநேகம் பெட்டிகள். ஒவ்வொரு பெட்டியிலும் இதுபோன்று நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. இந்த உலகத்தில் எத்தனையோ மனிதர்கள் எங்கெல்லாமோ நமக்கு சம்பந்தமில்லாமல் பிறந்து வாழ்ந்து மடிகின்றனர்.
ஒவ்வொருவர் ஏறுவது ஒரு பிறப்புக்கு ஒக்கும். ஒவ்வொருவர் இறங்குவது ஒரு மரணத்துக்கு ஒக்கும்.
என் அருகில் அமர்ந்திருக்கின்ற ஒவ்வொருவரும் தனித்தனியே அவரவர் இடம் (நிலையம்) வரும்பொழுது இறங்கிபோகி றார்கள். நான் இறங்கவேண்டிய இடம் வரும்பொழுது நானும் தனியே இறங்கிப் போகிறேன். எதைப்பற்றியும் என் உடன் பயணம் செய்தவர்களைப் பற்றியும் கவலைப்படுவதில்லை.
இது தான் இந்த பூவுலகத்தில் நம் உறவுகளில் நிலை.
ஆத்மா என்பது ஒரு நுட்ப அலைகளின் கட்டு/ கோப்பு. அதாவது ரேடியோ அலைகள்போல. அது நிற்கும் (நிலைகொள்ளும்)இடத்திற்கு தக்கவாறு மாறுபட்டுக்கொண்டே இருக்கும். அதனால் உடலை விட்டு அகலும்போது அதற்கு உறவுகள் இல்லை. மனித உடலுக்கு மட்டுமே உறவுகள்; அவை உடலோடு அழிந்து விடுகின்றன